எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி

  • IndiaGlitz, [Saturday,June 30 2018]

'பாகுபலி' , 'பாகுபலி 2' படங்களின் உலகளாவிய வெற்றிக்கு பின்னர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'ஆர் ஆர் ஆர்' என்ற டைட்டில் இப்போதைக்கு வைக்கப்பட்டுள்ளது. ராஜமெளலி, ராம்சரண், ராமராவ் ஆகியவைகளின் முதல் எழுத்துதான் இந்த படத்தின் டைட்டில் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும் அவர்களது தேர்வு நடைபெற்று வருவதாகவும் கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த படத்தின் ஒரு நாயகியாக கீர்த்திசுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் மிகவிரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கீர்த்திசுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'நடிகையர் திலகம்' படத்திற்கு முதன்முதலில் பாராட்டு தெரிவித்தவர் எஸ்.எஸ்.ராஜமெளலி என்பதும் இந்த படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் கவர்ந்ததால் அவருடைய படத்தின் நாயகியாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீர்த்திசுரேஷ் தற்போது விஜய் நடித்து வரும் 'சர்கார்', விஷால் நடித்து வரும் 'சண்டக்கோழி 2' , விக்ரம் நடித்து வரும் 'சாமி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஹே ராம்' படத்துடன் கனெக்சன் ஆன 'விஸ்வரூபம் 2'

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் வெளிவந்த 'தூங்காவனம்'

சிம்பு-வெங்கட்பிரபு படத்தின் புதுமையான டைட்டில்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்பதும், இந்த படம் 'பில்லா' உள்பட எந்த படத்தின் தொடர் பாகம் இல்லை என்பதும், புதிய திரைக்கதையில் உருவாகவுள்ள அதிரடி ஆக்சன் படம் என்பதும் தெரிந்ததே

சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' படத்திற்கு சூர்யா செய்யும் உதவி

வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்திற்காக சூர்யாவும் அவரது சகோதரர் கார்த்தியும் ஒரு பாடல் பாடியுள்ள்னர் என்பதும் அந்த பாடல் வரும் ஜூலை 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது

திருமணமான ஆசிரியையுடன் 16 வயது மாணவன் கள்ளக்காதல்: 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பகவான் என்ற ஆசிரியரால் ஆசிரியர் வர்க்கமே பெருமை அடைந்தது. ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரை உலகமே போற்றியது.

முஸ்லீம் சிறுமியை தத்தெடுத்த வாலிபருக்கு 16 கத்திக்குத்து

முஸ்லீம் சிறுமி ஒருவரை தத்தெடுத்த நபர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று 16 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.