விஜய், சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் கீர்த்திசுரேஷ்?

  • IndiaGlitz, [Monday,October 24 2016]

சிவகார்த்திகேயனுடன் 'ரஜினிமுருகன்', 'ரெமோ' என இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது இளையதளபதி விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.
மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்திசுரேஷ், இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளர்.
இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள 'சண்டக்கோழி 2' படத்திலும் நடிக்க கீர்த்திசுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதே படத்திற்காக மஞ்சிமா மோகனிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருவதை ஏற்கனவே பார்த்தோம். எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்போது இந்த படத்தின் ஹீரோயின் யார்? என்பது குறித்து தெரியவரும்