சிம்புவின் 'AAA'வில் விஜய்-தனுஷ் நாயகி?

  • IndiaGlitz, [Saturday,July 30 2016]

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதனையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'ரஜினிமுருகன்' என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகிகள் பட்டியலில் இணைந்தார்.

மேலும் தற்போது அவர் தனுஷின் 'தொடரி' மற்றும் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இளையதளபதி விஜய்யின் 'விஜய் 60' படத்தின் நாயகியும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே ஒரு நாயகியாக ஸ்ரேயா நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் தெரிந்ததே. யுவன்ஷங்கர்ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.