விளக்கு பூஜையுடன் முடிந்த சாவித்ரி படத்தின் படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'நடிகையர் திலகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

நேற்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் சாவித்ரி படத்திற்கு படத்திற்கு விளக்கேற்றி பூஜை செய்து படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்தனர். சாவித்ரியாக கீர்த்திசுரேஷ் நடித்து வரும் இந்த படத்தில் துல்கர் சல்மான், சமந்தா உள்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மே மாதம் 9ஆம் தேதி இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.