கீர்த்திசுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த தமிழ் படம் எதுவும் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகவில்லை இருப்பினும் அவர் தற்போது ‘தலைவர் 168’ உள்பட மூன்று தமிழ் படங்களில் நடித்து வருவதால் இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த ’மிஸ் இந்தியா’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் மார்ச் 5ஆம் தேதியே அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகள் திரையிடப்படும் என இந்த திரைப்படத்தை அமெரிக்க உரிமையை பெற்ற நிறுவனம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கீர்த்தி சுரேஷின் 20 வது படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நரேந்திர நாத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கீர்த்திசுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.