நீண்ட நாள் கனவு நிறைவேறியது: பாவாடை தாவணியில் கீர்த்தி சுரேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாவாடை தாவணி அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக, பாவாடை தாவணியில் ஸ்டில் ஒன்றை பதிவு செய்து கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் நடிகையர் திலகம் திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இவர் தற்போது ரஜினியின் ’அண்ணாத்த’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் தான் குருவாயூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததாகவும் தனது பெற்றோர்களிடம் தரிசனம் செய்தது திருப்தி அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நீண்ட நாட்களாக பாவாடை தாவணி அணிய வேண்டும் என்ற தனது கனவு இன்று நிறைவேறி இருப்பதாகவும் இதற்காக எனது டிசைனர் பூர்ணிமாவுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாவாடை தாவணியில் கீர்த்தி சுரேஷை பார்த்த அவரது ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
A blissful morning after Guruvayur temple darshan ??????
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 2, 2021
Thank you to @PoornimaPranaah, I have been meaning to wear this half saree and finally I did.
And to my mom for being the stylist ??#TraditionalVibes #TempleVisits pic.twitter.com/mFebbz84rC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments