கீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,August 19 2019]

'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது பாலிவுட்டில் போனிகபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அஜய்தேவ்கான் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு 'மெய்டன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1952ஆம் ஆண்டு 1962ஆம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணிக்கு தலைமை தாங்கிய சயிது அப்துல்ரஹிம் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் இந்த படத்தின் கதை. இவரது தலைமையின் கீழ்தான் இந்திய கால்பந்து அணி, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றாது. அதேபோல் 1956ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய அணி சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சயிது அப்துல்ரஹிம் கேரக்டரில் அஜய்தேவ்கானும், அவரது மனைவியாக கீர்த்திசுரேஷூம் நடித்து வரும் இந்த படத்தை அமித்ஷர்மா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. கீர்த்திசுரேஷின் முதல் பாலிவுட் படம் சூப்பர் ஹிட்டாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அரசியலில் இருந்து விலகிய தீபாவின் முடிவில் திடீர் மாற்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

ஒவ்வொரு பெண்ணும் அழகுதான்: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீராங்கனை

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளில் ஒருவரான சாரா டெய்லர், அந்த அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடி வந்தார். ஒருசில காரணங்களால் அவர் சமீபகாலமாக அணியில் இருந்து

மனைவியின் பிகினி புகைப்படத்திற்கு விராத் கோஹ்லியின் கமெண்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, கடந்த ஆண்டு வெளிவந்த 'ஜீரோ'

சேரனை நாமினேட் செய்துவிட்டு கதறி அழும் லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் சேரனும், லாஸ்லியாவும் ஆரம்பத்தில் இருந்து தந்தை-மகள் என நெருக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த வார டாஸ்க்கில் லாஸ்லியா சரியாக நடிக்கவில்லை

கவின் - கஸ்தூரி மீண்டும் மோதலா? கேமிரா உடைக்கப்பட்டதாகவும் வதந்தி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த கஸ்தூரிக்கும் கவினுக்கும் ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. கஸ்தூரியை 'காக்கா' என கவின் கூற,