'அப்படி போடு லவ் லவ் லவ்': கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’அண்ணாத்த’, தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படம், நானியுடன் ஒரு படம் மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படம் என பிஸியாக உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சகோதரி பதிவு செய்துள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ’அப்படி போடு லவ் லவ் லவ்’ என்று கீர்த்தி சுரேஷ் கமெண்ட் அடித்துள்ளது வைரலாகி வருகிறது,
கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி, தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்த புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அதில் அவர் 20 கிலோ எடை குறைந்து ஸ்லிம்மாக மாறி உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கூறியபோது ’நான் குண்டாக இருந்ததால் என்னை எப்போதும் என் அம்மா மற்றும் தங்கையுடன் ஒப்பிட்டு பலர் விமர்சனம் செய்து இருந்தார்கள். யாரென்று தெரியாதவர்கள் எல்லாம் எனக்கு அட்வைஸ் செய்தார்கள். ஒரு கட்டத்தில் நானே என்னை வெறுக்க ஆரம்பித்தபோது என்னுடைய யோகா டீச்சர் தாரா சுதர்ஷன் அவர்கள் எனக்குள் இருக்கும் பலத்தை புரிய வைத்து எனக்கு முறையான பயிற்சி அளித்தார். அதன்காரணமாக தற்போது எனது எடை 20 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளது என பதிவு செய்துள்ளார்
சகோதரி ரேவதியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுதான் கீர்த்தி சுரேஷ் ’அப்படி போடு லவ் லவ் லவ், உன்னை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது’ என்று பதிவு செய்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout