3 படங்களில் தங்கச்சி கேரக்டர், கிளிசரின் இல்லாமல் 4 நிமிடங்கள் அழுத கீர்த்தி சுரேஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர்களுக்கு தங்கையாக தற்போது நடித்துவருகிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாகயும் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார்
இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் செல்வராகவன் நடித்து வரும் ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்திலும் செல்வராகவனின் தங்கையாக தான் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நான்கு நிமிடம் செண்டிமெண்ட் காட்சி ஒன்று இருப்பதாகவும் அந்த காட்சியில் கீர்த்ஹி சுரேஷ் கிளிசரின் இல்லாமலேயே கண்களில் கண்ணீரை வரவழைத்து நடித்ததாகவும், அந்த காட்சியை பார்த்து படக்குழுவினர்களே ஆச்சரியம் அடைந்ததாகவும், இந்த காட்சி திரையில் பார்க்கும்போது திரையரங்குகளில் உள்ள ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி என்றும் கூறப்பட்டு வருகிறது
ஏற்கனவே ’நடிகையர் திலகம்’ படத்தில் கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் வரவழைத்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், ‘சாணிக்காகிதம் படத்திற்கும் தேசிய விருது பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments