தேசிய விருதை அடுத்து 'மிஸ் இந்தியா'வை நோக்கி செல்லும் கீர்த்தி சுரேஷ்

  • IndiaGlitz, [Monday,August 26 2019]

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம் திரைப்படம்' அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த நிலையில் தற்போது அவர் போனி கபூர் தயாரிப்பில் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்க உள்ள இன்னொரு படத்தின் டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'மிஸ் இந்தியா' என்பதாகும். இந்த படம் கீர்த்தி சுரேஷின் 20 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கின்றார். கீர்த்திசுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டேனி ஒளிப்பதிவில் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 'மிஸ் இந்தியா' படத்தின் டைட்டில் டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

உங்கள காலி பண்றதுதான் என் பிளான்: சாண்டியிடம் கவின் ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவினை அவருக்கு நெருக்கமானவர்களே நாமினேஷன் செய்துள்ள நிலையில் கவின் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தெரிகிறது

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்:

ஆக்சன் கிங் அர்ஜுன் சமீபத்தில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' மற்றும் விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன் ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது ஜெயம்ரவி நடிக்கும்

இணையத்தில் வைரலாகும் 'இந்தியன் 2' படத்தின் கதை! 

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனவுடனே அந்த திரைப்படம் இன்டர்நெட்டில் வெளியாகி வசூலில் பெரும் பகுதியைப் பாதித்து வரும் நிலையில் தற்போது இன்னும் ஒருபடி மேலே போய்

ஜிவி பிரகாஷின் 'டக்கரு பார்வை' ரிலீஸ் குறித்த தகவல்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டு வருவதால் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள், புரமோஷன்கள் தினமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

'காப்பான்' திரைப்படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காப்பான்'.