ஒற்றைக்காலில் நின்று யோகாசனம் செய்யும் கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ
- IndiaGlitz, [Thursday,July 22 2021]
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ இயக்குனர் செல்வராகவன் நடித்து வரும் ‘சாணிக்காகிதம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது யோகாசனம், உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார் என்பது தெரிந்தது.
அந்த வகையில் சற்று முன் அவர் ஒற்றை காலில் பாலன்ஸ் செய்து ஒற்றை காலை மேலே தூக்கி கையையும் மேலே தூக்கி செய்யும் யோகாசனம் செய்துள்ளார். இது குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.