விஜய்க்கு செம டான்ஸ் மூலம் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்: வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள், சக நடிகர்-நடிகைகள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையுமான கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் நடித்த ‘யூத்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு செம நடனமாடி தனது வாழ்த்தை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த பதிவில் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் கூறிய வாழ்த்துச் செய்தியில் ’நீங்கள் மிகச்சிறந்த நடிகராக இருப்பது மட்டுமன்றி ரசிகர்களை திருப்தி செய்வதில் ‘பீஸ்ட்’ ஆக இருக்கின்றீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Dancing for Aal Thotta Boopathy!
— Keerthy Suresh (@KeerthyOfficial) June 22, 2021
An ardent fan of #Thalapathy!❤️
You are not only one of the best at performing, but you are one of a #Beast at entertaining. ❤️@actorvijay sir #ChummaCasualah with thambi @PawanAlex ?? @ShruthiManjari ???? #HBDThalapathyVijay pic.twitter.com/GeY2MOrfAW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com