ஹாலிவுட்டுக்கு போ நண்பா... விஜய் அட்மினுக்கு வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்..!

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

தளபதி விஜய்க்கு மிகவும் நெருக்கமான ஜெகதீஷ் அவர்களை ’ஹாலிவுட் போ நண்பா’ என நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ’மகாராஜா’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். ’மகாராஜா’ திரைப்படம் மிகவும் அருமையான திரைக்கதை என்றும் நிதிலன் சுவாமிநாதன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி அவர்களுக்கு 50வது படம் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது என்றும் இந்த படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் எடிட்டர் பிலோமின் ராஜ் படத்தை கச்சிதமாக எடிட் செய்து ஒவ்வொரு காட்சியையும் சீட் நுனிக்கு வரவழைத்து உள்ளார் என்றும் தயாரிப்பு நிறுவனமான பேஷண்ட் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், ‘புர்ஜ் டு ஹாலிவுட் போ நண்பா’ என்றும் பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர், உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெகதீஷ் தி ரூட் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இந்நிறுவனம் தயாரிக்கும் ’ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.