ரஜினிக்கு ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் நடிப்பார்: சொன்னது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,November 10 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினியின் தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் 70 வயது ரஜினிக்கு தங்கையாக நடிப்பதா? என கீர்த்தி சுரேசை பலர் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ் தாயார் மேனகா ரஜினி தங்கையாக மட்டுமின்றி ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் அடிப்பார் என்று கூறியுள்ளார்.

சினிமா என்பது நிழல்தான் என்றும், இதில் வெறும் நடிப்பு மட்டுமே பார்க்கவேண்டும் என்றும், வயதை பார்ப்பது தேவையில்லாத விஷயங்களில் ஒன்று என்றும், ரஜினிகாந்த் எப்போதும் மனதிற்கு ஹீரோவாகவே தெரிவார் என்றும், ரஜினிகாந்த் தங்கை கேரக்டரில் கீர்த்தி நடித்திருந்தாலும் ஜோடியாக நடிக்க கேட்டாலும் நடிப்பார் என்று கூறினார்.

மேலும் கடந்த 1981-ஆம் ஆண்டு நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மேனகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை நினைவுகூர்ந்த மேனகா ’40 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் எப்படி அழகாகவும் ஆக்டிவ்வாகவும் இருந்தாரோ அதே போல் தான் இப்போதும் அவர் இருக்கிறார் என்று கூறினார்.

தமிழ் திரையுலகில் அம்மா மற்றும் மகள் ஒரே ஹீரோவுக்கு ஏற்கனவே ஜோடியாக நடித்து உள்ளனர் என்பதும் குறிப்பாக ரஜினிக்கு ஜோடியாக லட்சுமி மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஜோடியாக நடித்துள்ளனர் என்பதும், அந்த வகையில் மேனகாவை அடுத்து கீர்த்தி சுரேஷும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.