சூர்யாவுக்காக பிரார்த்தனை செய்த கீர்த்திசுரேஷ்: என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சூர்யா சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இருப்பினும் தற்போது சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சூர்யா விரைவில் குணமாக வேண்டும் என்று திரையுலகினர் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும் சூர்யா தனது உடல்நிலையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனியர் நடிகர்கள் அறிவுரை கூறினர். இந்த நிலையில் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தகவலை அடுத்து பல ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சூர்யாவுடன் ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படத்தில் நடித்தவரும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவருமான கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சூர்யா விரைவில் குணமாகி வர பிரார்த்தனை செய்கிறேன் என்றும் நன்றாக ஓய்வு எடுங்கள்’ என்றும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து கீர்த்தி சுரேஷுக்கு சூர்யாவின் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மீண்டும் ஒரு படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
May you get good rest and get well soon @Suriya_offl sir!
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 9, 2021
Praying for a quick recovery! ???? https://t.co/0kGl7UJ1i9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments