சூர்யாவுக்காக பிரார்த்தனை செய்த கீர்த்திசுரேஷ்: என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,February 09 2021]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சூர்யா சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இருப்பினும் தற்போது சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சூர்யா விரைவில் குணமாக வேண்டும் என்று திரையுலகினர் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

மேலும் சூர்யா தனது உடல்நிலையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனியர் நடிகர்கள் அறிவுரை கூறினர். இந்த நிலையில் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தகவலை அடுத்து பல ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சூர்யாவுடன் ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படத்தில் நடித்தவரும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவருமான கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சூர்யா விரைவில் குணமாகி வர பிரார்த்தனை செய்கிறேன் என்றும் நன்றாக ஓய்வு எடுங்கள்’ என்றும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து கீர்த்தி சுரேஷுக்கு சூர்யாவின் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மீண்டும் ஒரு படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி… இந்தியா படுதோல்வி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்

தனுஷின் 'கர்ணன்' பட சூப்பர் அப்டேட்டை தந்த கலைப்பு தாணு!

தனுஷ் நடிப்பில் 'பரியேறும் பெருமாள்' இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

பயிற்கடன் தள்ளுப்படிக்கான ரசீது 10-15 நாட்களில் வழங்கப்படும்- தமிழக முதல்வர் விளக்கம்!

விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

காதலில் விழுந்தது எப்படி? சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை பேட்டி!

சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை ஒருவர் தனது காதல் தொடங்கியது எப்படி என்பது குறித்து பேட்டியளித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் விமர்சனத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதிலடி!

தமிழக விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.