நயன்தாராவை அடுத்து கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,May 23 2021]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை அடுத்து தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து சில சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து தற்போது கீர்த்தி சுரேஷும் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திலும் ஊசி தெரியவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்த எந்த சர்ச்சையும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நடிகர் சந்தானம் உறவுப்பெண் மர்ம மரணம்? கொலையா? விபத்தா?

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்து இருக்கும் நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது மரணம் கொலையா?

10 மாதத்தில் 3 முறை கொரோனாவில் இருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்… நம்பிக்கை கதை!

கொரோனா நோய்த்தொற்று பரவலால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களை அறியாமலே மன அழுத்ததிற்கு ஆளாகி உள்ளனர்.

கள்ளச்சந்தையில் மருந்து விற்று, குண்டர் சட்டத்தில் கைதான சகோதரர்கள்....!

ரெம்டெசிவர்  மருந்து குப்பிகளை  கள்ளச்சந்தையில் விற்பனை செய்த, 

இந்த போஸில் கீர்த்தி சுரேஷை யாராவது பார்த்ததுண்டா? 5 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்ஸ்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' செல்வராகவன் நடித்து வரும் 'சாணிக்காகிதம்' உள்ளிட்ட

தேனீக்களுடன் போட்டோ ஷுட் நடத்திய ஹாலிவுட் நடிகை… வைரல் புகைப்படம்!

ஒரு தேனீ கொட்டிவிட்டாலே அலறித் துடிக்கிறோம். இந்நிலையில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகையாகப் போற்றப்படும்