மீண்டும் படப்பிடிப்பிற்கு கிளம்பிய கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு இன்றி வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பிற்கு கிளம்பி உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்பி உள்ளதாகவும் ’சாணிக்காகிதம்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை இயக்குனர் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் திடீரென ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருமே வித்தியாசமான கெட்டப்பில் உள்ளனர் என்பதும் இருவரும் கொள்ளையர்கள் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் இதனை அடுத்து செல்வராகவன் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்புக்கான பணிகளில் இறங்குவார் என்று கூறப்படுகிறது.
Our @KeerthyOfficial Back to shoot For #saanikaayidham ??❤ #KeerthySuresh @KeerthyOfficial pic.twitter.com/FxsA25vqTt
— Trends Keerthy (@TrendsKeerthy) June 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com