வரலட்சுமியைப் பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது: கீர்த்திசுரேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடித்த 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் 18ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து கீர்த்திசுரேஷ் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
'சண்டைக்கோழி 2' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தயக்கத்துடன் தான் வந்தேன். ஆனால் இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. ஏனென்றால், முதல் பகுதியில் மீரா ஜாஸ்மின் சிறப்பாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். இயக்குநர் லிங்குசாமி கதைக் கூறும்போதே நடித்தும் காட்டுவார். கதாநாயகிக்கு நடிக்கும் வாய்ப்பு ஒரு சில படங்களில் மட்டுமே அமையும். இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பை இயக்குநர் லிங்குசாமி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ராஜ்கிரணுடன் ரஜினிமுருகனில் நடித்திருக்கிறேன். ஆனால் இருவருக்கும் அவ்வளவாக காட்சிகள் இல்லை. இந்தப் படத்தில் ஒரே ஒரு கட்சியென்றாலும் நச்சென்று இருக்கும்.
வரலட்சுமியைப் பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது. அந்தளவு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். மதுரை தமிழை எப்படி பேச வேண்டுமென்று பிருந்தா சாரதி கற்றுக் கொடுத்தார். முதல் இரண்டு மூன்று நாட்கள் உடல் மொழியுடன் பேசி நடிக்க சிரமம் இருந்தாலும், என்னால் முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறேன்.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டப்பிங் பேசியிருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜாவுடன் முதல் படம். இப்படத்தில் இடம்பெறும் ‘கம்பத்து பொண்ணு’ பாடல் என்னுடைய அபிமானப் பாடல். என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. விஷாலின் 25வது படத்தில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments