எங்கள் கனவு திருமணத்தில், எங்கள் கனவு நாயகன்: விஜய் விசிட் குறித்து கீர்த்தி சுரேஷ்..!

  • IndiaGlitz, [Thursday,December 19 2024]

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்திற்கு விஜய் வருகை தந்ததை எங்கள் கனவு திருமணத்தில் எங்கள் கனவு நாயகன் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார் என்று பதிவு செய்து, புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் திருமணம் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது. ஆண்டனி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக அவர் காதலித்து வந்த நிலையில், இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் சிறப்பாக நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும், குறிப்பாக தமிழ் திரை உலகில் இருந்து தளபதி விஜய் மற்றும் த்ரிஷா கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தனது திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த விஜய் குறித்த புகைப்படங்களை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ், எங்கள் கனவு திருமணத்தில் எங்கள் கனவு நாயகன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவும், அவர் வெளியிட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.