திருமண திட்டம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
- IndiaGlitz, [Tuesday,March 09 2021]
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனக்கு தொழில் அதிபருடன் திருமணமா? என்று பரவி வரும் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’, செல்வராகவன் நடித்து வரும் ‘சாணிக்காகிதம்’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு தொழிலதிபருடன் திருமணம் என்று வெளியாகிக் கொண்டிருக்கும் செய்தியை பார்த்து தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் தற்போதைக்கு திருமணம் செய்துகொள்ள தனக்கு நேரம் இல்லை என்றும் திருமணம் குறித்த எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை என்றும் கூறினார்
மேலும் எனது திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கை பற்றிய வதந்திகளை பரப்புவதற்கு பதில் நல்ல விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிடித்த நடிகர் விஜய் மற்றும் சூர்யா என்றும் ’மகாநதி’ படத்தில் நடித்தது மிகப்பெரிய சாதனை என்றும் அதை உயிருள்ளவரை மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கவர்ச்சியாக நடிப்பதற்கு எனக்கு என்று ஒரு எல்லை இருக்கிறது என்றும், அந்த எல்லையை நான் மீறமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது