close
Choose your channels

20 வயது நடிகருடன் காதலா? விஜய் வசனத்தை விளக்கமாக சொன்ன கீர்த்தி சுரேஷ்..!

Friday, July 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷ் 20 வயது நடிகரை காதலிப்பதாக வதந்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய் ஒரு திரைப்பட விழாவில் பேசிய வசனத்தை பதிலாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் விளம்பர விழாக்களில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் காதல் குறித்தும், திருமண வதந்திகள் குறித்தும் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அந்த வகையில் 20 வயது நடிகருடன் காதல் என்று வதந்தி பரவியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் ’தளபதி விஜய் கூறியது போல் வதந்திகளுக்கு விளக்கமளித்தால், அது உண்மையாகிவிடும் என்பதால் அதை புறக்கணித்து விடுவோம் ’ என்று தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் எனது நடிப்பு குறித்து யாராவது விமர்சனம் செய்தால் அதை நான் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன், அதை ஏற்றுக்கொண்டால் தான் ஒரு நடிகையாக என்னை நான் மேம்படுத்தி கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் திரைப்பட விழா ஒன்றில் பேசிய போது ’வதந்திகளுக்கு விளக்கம் அளித்தால் அது உண்மையாகிவிடும் என்பதால் அதை புறக்கணித்து விடுவோம்’ என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வசனத்தையே கீர்த்தி சுரேஷ் தனது வதந்திக்கும் பதிலாக அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment