நமக்கு தான் புரியல.. 3 வருடங்களுக்கு முன்பே காதலை அறிவித்த கீர்த்தி சுரேஷ்..

  • IndiaGlitz, [Wednesday,November 27 2024]

நடிகை கீர்த்தி சுரேஷ் மூன்று வருடங்களுக்கு முன்பே தனது வருங்கால கணவரின் பெயரை அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் யாருக்கும் புரியாத நிலையில், தற்போது மீண்டும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த போது தான் புரிகிறது என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், ஆண்டனி என்பவரை கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

துபாய் தொழிலதிபர் ஆண்டனி, சொந்த ஊர் கேரளா என்றும், கல்லூரியில் படிக்கும்போதே கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி ஆகிய இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக வளர்ந்தது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக தனது காதலை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்த கீர்த்தி சுரேஷ், சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 15 ஆண்டுகால உறவு என்று அவர் குறிப்பிட்டு, ஆண்டனி மற்றும் கீர்த்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் இருவருடைய பெயரிலும் உள்ள இரண்டு எழுத்தை எடுத்து, தான் தனது செல்ல குட்டிக்கு AntoNY x KEerthy (NY x KE) என்ற பெயரை வைத்திருந்தார் என்பதும், அந்த பெயரை அவர் அவ்வப்போது மூன்று வருடங்களாக குறிப்பிட்டு வந்துள்ளார். யாருக்கும் இது புரியாமல் இருந்தது என்றும், இப்பொழுதுதான் அது புரிய வருகிறது என்று பலர் பதிவு செய்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷின் இந்த பதிவுக்கு, த்ரிஷா 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

கணவருடன் மூகாம்பிகை, தனியாக திருப்பதி.. கோவில் கோவிலாக சுற்றும் ஜோதிகா..!

நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கும், தனியாக திருப்பதி திருமலை கோவிலுக்கும் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவாங்க... 'விடுதலை 2' வசனம் யாருக்கு?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கேரக்டர்களில் நடித்த 'விடுதலை 2' படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

செவ்வாய் தோஷம் இருந்தாலே திருமணம் ஆகாதா?

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், ஜோதிட ஆய்வாளர் பி. ராஜேந்திரன் அவர்கள் செவ்வாய் தோஷம் பற்றிய பொதுவான தவறான கருத்துக்களை உடைத்துள்ளார்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்.. கமல்ஹாசனின் முக்கிய அறிக்கை..!

இன்று அரசியலமைப்பு தினத்தை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாடி வரும் நிலையில் இதுகுறித்து உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முருகனை ஏன் தமிழர்கள் தெய்வம் என்று சொல்கிறோம்?

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் வெளியான வீடியோவில், முருகன் தமிழர்களின் தெய்வமாகவும், குறிஞ்சி நிலத்தின் அரசனாகவும் இருப்பது விளக்கப்பட்டுள்ளது.