கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானிசங்கர் முதன்முதலாக இணைந்து நடித்த திரைப்படம் ’ஹாஸ்டல்’. சுமந்து ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கத்தில் டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அசோக் செல்வன், ப்ரியா பவானிசங்கர், சதீஷ் உள்ளிட்டோர் இருக்கும் இந்த வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோக்செல்வன், ப்ரியா பவானிசங்கருடன் இந்த படத்தில் நாசர், முனிஸ்காந்த், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு போபோ என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Veryyy happy to release the First look of #Hostel
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 23, 2021
Looks like it’s all fun, @AshokSelvan!! ????
Best wishes @actorsathish @priya_Bshankar and team! ❤️?? @MemyselfSRK @pravethedop #BoboShashi @krrishskumar @muralikris1001 @YogiKpy @tridentartsoffl @teamaimpr @Muzik247in pic.twitter.com/iGezOJwgVB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments