ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அரசு அறிவித்த போதிலும் திரைப்படத்துறையினர்களுக்கு இன்னும் பெரிதாக தளர்வுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே துவங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? படப்பிடிப்பு தொடங்கினாலும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது. அனேகமாக இன்னும் குறைந்தது மூன்று மாதங்கள் கழித்தே திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் ஒரு சில திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ உள்பட ஒருசில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் மிக விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ’பெங்குயின்’ என்ற திரைப்படமும் தற்போது ஓட்டி பிளாட்பாரத்தில் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் ஜூன் மாதம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அனில் கிரிஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷுடன் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

கொரோனா நிதி சர்ச்சை: தளபதி விஜய்க்கு ஆதரவு அளித்த சிம்பு தயாரிப்பாளர்!

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் தனது ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு

நயன்தாரா பெற்ற முத்தத்திலேயே இதுதான் பெஸ்ட்: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகிய .அய்யா. திரைப்படத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கடந்த 15 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில்

புலிட்சர் விருதைத் தட்டிச்செல்லும் 3 இந்திய புகைப்பட கலைஞர்கள்!!! சாதித்தது என்ன???

காஷ்மீரின் சிறப்பு அஸ்தஸ்து நீக்கப்பட்ட காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை படமெடுத்த  3 இந்திய புகைப்பட கலைஞர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது

குடும்ப பகை எதிரொலி: 10ஆம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி கொலை

விழுப்புரம் அருகே இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து முதலிடத்தில் ராயபுரம்: பின்னாலே விரட்டி வரும் கோடம்பாக்கம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாள்தோறும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நேற்று சென்னையில் மட்டுமே 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி