குற்றாலத்தில் இன்று முதல் கீர்த்தி சுரேஷின் அடுத்த பட படப்பிடிப்பு.. இயக்குனர் இவர்தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் குற்றாலத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
நடிகை கீர்த்தி சுரேஷ், நானியுடன் நடித்த ’தசரா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்ததே. மேலும் உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் நடித்த ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குனர் சுமன் குமார் என்பவர் இயக்கத்தில் 'கேஜிஎப்’ ’கேஜிஎப் 2’ மற்றும் ’காந்தாரா’ உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் குற்றாலத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்தர விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். சீன் ரோல்டான் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யாமினி யாகமூர்த்தி ஒளிப்பதிவும் டிஎஸ் சுரேஷ் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர். இந்த படம் கீர்த்தி சுரேஷின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments