கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அதே நாளில் மாஸ் நடிகரின் படமும் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தென்னிந்திய மாஸ் நடிகரின் படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் கீர்த்தி சுரேஷ் படமும் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு அது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ரகு தாத்தா’.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பது தெரிந்ததே. 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த காலகட்டத்தில் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்து அதில் கூறியிருப்பதாவது: ரகு தாத்தா! சாகசம் நிறைந்த கயல்விழியின் கதை, உங்கள் மனங்களை கவர வருகிறது! உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், நெகிழவைக்கும் ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராகுங்கள். ரகு தாத்தா ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது! என பதிவு செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம்சுமன் குமார் இயக்கத்தில், சீன் ரோல்டான் இசையில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் ’ரகு தாத்தா’ ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தான் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ படமும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#RaghuThatha, Kayalvizhi’s heart-warming adventure is coming to theatres near you. Get ready for a hilarious, emotional and empowering rollercoaster ride!#RaghuThatha releases on 15th August 2024! Can’t wait for you guys to watch this! 🤗❤️
— Keerthy Suresh (@KeerthyOfficial) May 31, 2024
ரகு தாத்தா! சாகசம் நிறைந்த… pic.twitter.com/Hxb0ly1ABd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments