பெரியோர்களே.. தாய்மார்களே.. சினிமா ரசிகர்களே... கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ’மாமன்னன்’, ’போலோ சங்கர்’, ’தசரா’ ஆகிய மூன்று படங்கள் 2023ல் வெளியான நிலையில் அடுத்த ஆண்டு அவர் நடிக்க இருக்கும் நான்கு படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ’ரகு தாத்தா’.
காமெடி கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் 30, 40 வருடங்களுக்கு முன்னர் வண்டியில் சினிமா படத்தின் விளம்பரம் வெளிவருவது போன்ற காட்சி உள்ளது.
‘பெரியவர்களே, தாய்மார்களே, சினிமா ரசிகர்களே, ஹோம்பலே பிலிம்ஸ் வழங்கும் ’ரகு தாத்தா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அனைவருக்கும் அரிய தருகிறோம். உற்றார் உறவினர்களுடன் வந்து கண்டு களியுங்கள் என்று தண்டோரா போட்டு செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.
கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர். சுமன் குமார் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#RaghuThatha, a rollicking, hilarious adventure is coming soon to a cinema near you.
— Hombale Films (@hombalefilms) December 19, 2023
வேடிக்கையும் வினோதமும் நிறைந்த நகைச்சுவை திரைப்படம், ரகு தாத்தா. விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்…
▶️ https://t.co/kTXp5FY4jV@KeerthyOfficial @hombalefilms @VKiragandur @sumank… pic.twitter.com/x3XXVCtl0U
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com