கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி.. அட்லி அறிவிப்பு.. செம்ம போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அட்லி தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ’தெறி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

‘தெறி’ ஹிந்தி ரீமேக்கில் விஜய் கேரக்டரில் வருண் தவான், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன் கேரக்டரில் வாமிகா நடித்துள்ள நிலையில் இந்த படத்தை அட்லி மற்றும் பிரியா அட்லி தயாரித்துள்ளனர். காளீஸ் இயக்கத்தில் தமன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ‘பேபி ஜான்’ திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் ஒரு அட்டகாசமான போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா ஆகிய தேதிகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.