கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. குரூப் புகைப்படம் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ரகு தாத்தா’. இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இருக்கும் குரூப் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கேஜிஎப்’ ’கேஜிஎப் 2’ மற்றும் ’காந்தாரா’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘போலா சங்கர்,’ ‘தசரா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
🎬 That's a wrap, folks! 🎉🎥 Raghuthatha, where the revolution finds its home, has completed its fiery shoot! Stay tuned for a revolution that'll make your heart race! #Raghuthatha@KeerthyOfficial @hombalefilms #VijayKiragandur @sumank #MSBhaskar @yaminiyag @RSeanRoldan… pic.twitter.com/rk4oSw7FyO
— Hombale Films (@hombalefilms) May 26, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments