ரிசார்ட் ஓனருடன் 13 வருடங்கள் காதலா? கீர்த்தி சுரேஷ் அம்மா விளக்கம்!
- IndiaGlitz, [Saturday,January 28 2023]
நடிகை கீர்த்தி சுரேஷ் 13 வருடங்களாக ரிசார்ட் ஓனர் ஒருவரை காதலித்து வருவதாகவும் இன்னும் 4 வருடங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வைரலானது. இந்த செய்தி மிகப்பெரிய அளவில் அனைத்து ஊடகங்களில் பரவி வரும் நிலையில் இந்த செய்திக்கு தற்போது கீர்த்தி சுரேஷின் அம்மா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இது குறித்து கூறிய போது, ‘ரிசார்ட் ஓனரை கீர்த்தி சுரேஷ் 13 வருடங்களாக காதலித்து வருகிறார் என்பது முழுக்க முழுக்க பொய்யான தகவல், இந்த பொய்யான செய்திகளை பார்க்க கூட எங்களுக்கு விருப்பமில்லை, கீர்த்தி திருமணம் தொடர்பாக இணையத்தில் பரவி வதந்திக்கு எங்களது பதில் இதுதான், இது குறித்து பேசுவதற்கு எதுவுமே இல்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து 13 வருடங்களாக கீர்த்தி சுரேஷ் ரிசார்ட் ஓனரை காதலித்து வருவதாக தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தவர்களால் பரப்பப்பட்ட தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.