சென்னை பீச் மணலில் வாகனம் ஓட்டும் கீர்த்தி சுரேஷ்.. செம்ம த்ரில் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,November 06 2023]

நடிகை கீர்த்தி சுரேஷ் பீச்சில் வாகனம் ஓட்டும் த்ரில் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நம்ம சென்னையில் ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்ந்த அனுபவம்’ என கேப்ஷனாக குறிப்பிட்டு பீச்சில் வாகனம் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த மாஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு அட்லியின் மனைவி பிரியா ஆட்ட்லி உள்பட 5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.