ஒரு மாம்பழமே மாம்பழம் சாப்பிடுகிறது.. கீர்த்தி சுரேஷ் வீடியோவுக்கு கமெண்ட்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!
- IndiaGlitz, [Wednesday,June 14 2023]
நடிகை கீர்த்தி சுரேஷ் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாம்பழம் சாப்பிடும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் ஒரு மாம்பழமே மாம்பழம் சாப்பிடுகிறது உட்பட பல கமெண்ட்களை ரசிகர்கள் தெறிக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவர் தனது இன்ஸ்டாவில் கிளாமர் புகைப்படங்களை மட்டும் இன்றி நாய்க்குட்டியுடன் விளையாடும் வீடியோக்கள் உட்பட பலவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் பந்தூரி என்ற சீசன் மாம்பழத்தை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மாம்பழத்தை சாப்பிடும் முன் தனது தலை முடியை சரி செய்து கொண்ட அவர் மாம்பழத்தை ருசித்து சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு ரசிகர்களுக்கு ஹாட் பிளையிங் முத்தமிடும் காட்சி உள்ள வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ மற்றும் அதனை அடுத்து அவர் பதிவு செய்திருக்கும் புகைப்படத்திற்கும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. ஒரு மாம்பழமே மாம்பழம் சாப்பிடுகிறது என்ற கமெண்ட் தான் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.