'கபாலி' நாயகியுடன் கீர்த்தி சுரேஷ்.. உருவாகிறது த்ரில்லர் வெப்தொடர்..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

கபாலி நாயகியுடன் கீர்த்தி சுரேஷ் ஒரு திரில்லர் வெப் தொடரில் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், ‘கபாலி’ படத்தில் நாயகி நடித்த ராதிகா ஆப்தேவுடன் இணைந்து ஒரு திரில்லர் வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவருக்கும் கதையில் சம முக்கியத்துவம் தரும் வகையில் இந்த வெப் தொடரின் கதை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த வெப் தொடரை தயாரிக்க இருப்பதாகவும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடிக்காக தயாராகும் இந்த தொடர் மிகுந்த வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் ஹிந்தி தொடர் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல என்ட்ரி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.