கமல்ஹாசனின் 'கல்கி 2898ஏடி' திரைப்படத்தில் திடீரென இணைந்த கீர்த்தி சுரேஷ்.. என்ன கேரக்டர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898ஏடி’ திரைப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.
கமல்ஹாசன் வில்லனாக இந்த படத்தில் மிரட்டி இருப்பதாகவும் அவரது காட்சி 10 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் அசத்தலாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பிரபாஸின் சிறந்த நண்பராக புஜ்ஜி என்ற ரோபோவை வரும் 22ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புஜ்ஜி என்ற சிறிய வகை ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரோபோவுக்கு மிகவும் சிறப்பாக அவரது குரல் பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதுவரை கமல்ஹாசன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்காத நிலையில் அவர் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராஜேந்திர பிரசாத், பசுபதி, அன்னாபென் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்தை சுமார் 600 கோடி ரூபாய் செலவில் வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
Presenting '𝐅𝐫𝐨𝐦 𝐒𝐤𝐫𝐚𝐭𝐜𝐡 𝐄𝐩𝐢𝐬𝐨𝐝𝐞 𝟒: Builiding a Superstar #Bujji' from #Kalki2898AD!!!https://t.co/PwgcOBfJcf @SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @BelikeBujji… pic.twitter.com/tfmW7EtYiF
— Kalki 2898 AD (@Kalki2898AD) May 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments