கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்?

  • IndiaGlitz, [Thursday,May 09 2019]

கடந்த ஆண்டு சர்கார், சண்டக்கோழி, சீமராஜா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி 2 என ஆறு தமிழ் படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. ஆனால் அதே நேரத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தி படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் கீர்த்திசுரேஷ் தான் நாயகி என்றும், இதுவொரு நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் என்பவர் இயக்கவிருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் ஏற்கனவே 'மேயாத மான்' மற்றும் 'மெர்க்குரி' ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்மையா? சாந்தினி தமிழரசன் பதில்

பிக்பாஸ் இரண்டு சீசன்கள் முடிவடைந்து மூன்றாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இதற்கான புரமோஷன் படப்பிடிப்பில் சமீபத்தில் கமலஹாசன் கலந்து கொண்டார்.

ஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஒருவழியாக வரும்  ஞாயிறுடன் முடிவுக்கு வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டே போட்டிகள் மட்டுமே உள்ளது.

பிரபல நடிகர் தாக்கியதாக உதவியாளர் சென்னை போலீசில் புகார்

பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபன் தாக்கியதாக அவருடைய உதவியாளர் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜல்லி மீன்களால் உடல் ரீதியாக படாதபாடு படும் மீனவர்கள்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில், மீன் பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பலர்,  ஜல்லி மீன்களால் பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது...

தயாரிப்பாளர் சங்கத்தில் 9 பேர் நியமனம்: விஷால் தரப்பின் அதிரடி நடவடிக்கை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு தனி அதிகாரி என்.சேகர் என்பவரை நியமனம் செய்து, இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் குறித்த முடிவுகளை அவரே எடுப்பார் என அறிவித்தது