கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்?

  • IndiaGlitz, [Thursday,May 09 2019]

கடந்த ஆண்டு சர்கார், சண்டக்கோழி, சீமராஜா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி 2 என ஆறு தமிழ் படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. ஆனால் அதே நேரத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தி படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் கீர்த்திசுரேஷ் தான் நாயகி என்றும், இதுவொரு நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் என்பவர் இயக்கவிருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் ஏற்கனவே 'மேயாத மான்' மற்றும் 'மெர்க்குரி' ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.