' ஹிந்தி தெரியாது போய்யா': கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' டீசர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆரம்பக் காட்சிகளில் என்சிசி அணிவகுப்பில் ஹிந்தியில் பேசும்போது, ‘தமிழ்ல்ல சொல்லுங்கள் சார், எனக்கு ஒண்ணுமே புரியல’ என்று சொல்வதில் இருந்து கீர்த்தி சுரேஷ் இந்த படம் முழுவதும் தனது இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளார் என்பது தெரிய வருகிறது.
ஹிந்திக்கு எதிராக பேசும் வசனங்கள் ஆகட்டும், கரும்பலகையில் ஹிந்தியை அழிப்பது ஆகட்டும், கீர்த்தி சுரேஷ் தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். இந்த ஹிந்தி தேர்வு எழுதினால் தான் எங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்குமா? அப்படி என்றால் எங்களுக்கு அந்த ப்ரோமோஷனே தேவை இல்லை என்று மேலதிகாரியிடம் ஆவேசமாக சொல்லும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அசத்தல்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவது, என்னுடைய கருத்து வெகுஜனங்களுக்கு போய் சேர வேண்டுமென்றால் மெட்ராஸ் போக வேண்டும் என்று சொல்வது ஆகியவை கீர்த்தி சுரேஷ் மூலம் இயக்குனர் தனது ஹிந்தி எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த காலகட்டத்தில் இந்த கதை நடப்பதாக உருவாக்கி இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இறுதியில் ’இதையெல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால் ஹிந்தி தெரியாது போயா என்று சொல்லுவோம்’ என கீர்த்தி சுரேஷ் பேசும் வசனத்துடன் இந்த டீசர் முடிவடைகிறது.
மொத்தத்தில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர். சுமன் குமார் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready to experience the ultimate comedy extravaganza that celebrates the misadventures of Kayalvizhi in #Raghuthatha, a comedy like no other.
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 12, 2024
Coming soon to a cinema near you!
கயல்விழியின் அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள்.
#ரகுதாத்தா, விரைவில் உங்கள் அருகில்… pic.twitter.com/JbxqS1uvx8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com