கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகுதாத்தா'.. ZEE5 ஓடிடியில் ரிலீசாகும் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ,குடும்ப பொழுதுபோக்கு சித்திரமான ‘ரகுதாத்தா’ செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியராகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.!
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ~ ~ ரகுதாத்தா ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது ~
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று செப்டம்பர் 13, 2024 அன்று பிளாக்பஸ்டர் தமிழ் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ரகுதாத்தா'வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொழுதுபோக்கு டிராமா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’. செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் பார்வையாளர்கள் ‘ரகுதாத்தா’வை பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யலாம். ரகுதாத்தா தமிழிலும், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.
வள்ளுவன்பேட்டை என்ற அழகிய கிராமத்தில் ‘ரகுதாத்தா’ கதை விரிகிறது, அங்கு கயல்விழி (கீர்த்தி சுரேஷ் நடித்த) மரியாதைக்குரிய வங்கி ஊழியராக பணிபுரிகிறார், இந்தி திணிப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்காக, மக்களிடம் பிரபலமாக இருக்கிறார். தன் முற்போக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பொறியியலாளர் தமிழ்செல்வனை (ரவீந்திர விஜய்), திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக்கொள்கிறபோது, அவளுடைய வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கிறது.
ஒரு திடுக்கிடும் ரகசியம் தெரியவரும் வேளையில், கயல் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி வருகிறது, அவள் எதிர்த்துப் போராடிய இந்தியை கற்க வேண்டும் மற்றும் பரீட்சை எழுத வேண்டும் எனும் நிலை வருகிறது. இந்நிலையில் கயல் என்ன செய்வாள்? அவளுடைய நீண்டகால நம்பிக்கைகள் அல்லது எதிர்பாராத சமரசம்? எதை நோக்கி செல்வாள். நவீன இந்தியாவில் மொழி அரசியல், பாலினப் பாகுபாடுகள் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஆய்வுக்கு இப்படம் களம் அமைக்கிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‘பெண் சுதந்திரத்தை நம்பும் “கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த அட்டகாசமான கதையை ZEE5 இல் காணவுள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாங்கள் எடுத்துக்கொண்ட கருப்பொருள்களைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்.
ஹோம்பாலே பிலிம்ஸின் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறுகையில், "ரகுதாத்தா'வின் உலக டிஜிட்டல் பிரீமியர் காட்சிக்காக ZEE5 உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ZEE5-ன் விரிவான ரசிகர்கள் களம் மற்றும் உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சாதனை, எங்கள் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. 'ரகுதாத்தா' எங்கள் தயாரிப்பில் மிக முக்கியமான திரைப்படமாகும், ஏனெனில் இது முக்கியமான சமூகப் பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாகும் அதே நேரத்தில் நகைச்சுவையுடன் உரையாடுகிறது, மேலும் ZEE5 மூலம் உலகம் முழுவதும் வாழும் ரசிகர்கள் 'ரகுதாத்தா' படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
'ரகுதாத்தா' படத்தின் இயக்குநர் சுமன் குமார், 'ரகுதாத்தா' படத்தை உருவாக்கியது ஒரு அழகான பயணம். இந்தத் திரைப்படம் மொழி அரசியல் மற்றும் பாலினப் பாகுபாடுகள் குறித்து பார்வையாளர்களிடையே அர்த்தமுள்ள உரையாடல்களை ஏற்படுத்தியது மிக மகிழ்ச்சியைத் தந்தது. தமிழ்செல்வனாக நடித்துள்ள ரவீந்திர விஜய் உட்பட ஒட்டுமொத்த நடிகர்களும் இந்த கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடையதாக மாற்றுவதில் தங்கள் முழு உழைப்பை வழங்கினர். ZEE5 இல் இப்படத்தை உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments