close
Choose your channels

'ரகு தாத்தா' படத்தின் கதை இதுதான்.. இசை வெளியீட்டு விழாவில் ஓப்பனாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!

Sunday, July 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கீர்த்தி சுரேஷ் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியபோது ’ரகு தாத்தா’ படத்தின் கதையை கேட்டதும் எனக்கு இந்த கேரக்டர் சரியாக வருமா என்று நான் யோசித்தேன். ஆனால் இயக்குனர் நான் நடிப்பதில் உறுதியாக இருந்தார்.

நான் நடித்த ‘பேபி ஜான்’ என்ற ஹிந்தி திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் நிலையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான ’ரகு தாத்தா’படத்தில் நடித்திருக்கிறீர்கள் என்று பலரும் கேட்டனர். ஆனால் இந்த படம் ஹிந்தி திணிப்புக்கு எதிரான படம் மட்டுமின்றி அனைத்து திணிப்புக்கும் குறிப்பாக பெண்கள் மீதான திணிப்பை பேசுகிறது. இயக்குனர் ஹிந்தியை கையில் எடுத்து ஒரு நல்ல நகைச்சுவை படமாக உருவாக்கி உள்ளார், கண்டிப்பாக இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்’ என்று கூறியுள்ளார்

கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர். சுமன் குமார் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment