close
Choose your channels

'ரகு தாத்தா' உள்பட 3 தமிழ் படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு விவரங்கள்..!

Thursday, September 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

கடந்த வாரம் விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் வெளியான நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் எந்த படமும் வெளியாகாத நிலையில் ஓடிடியில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ உட்பட 3 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் ஜி5 ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது.

அதேபோல் ’கோலி சோடா’ ’கோலி சோடா 2’ ஆகிய திரைப்படங்களை அடுத்து ஹாட்ஸ்டாரில் ’கோலி சோடா ரைசிங்’ என்ற படம் நேரடியாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆகா ஓடிடியில், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற திரைப்படம் வெளியாகிறது. இதனை அடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்கள் ரிலீஸ் குறித்த தகவலை பார்ப்போம்,

அமேசான் ப்ரைம் ஓடிடியில் ‘விஷாயிசம்’ என்ற மலையாள திரைப்படமும், சோனி லைவ் ஓடிடியில் ‘தலைவன்’ என்ற மலையாள திரைப்படமும், ஜீ5 ஓடிடியில் ‘நுனகுழி’ என்ற மலையாள திரைப்படமும் வெளியாகிறது.

மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’ஏய்’என்ற தெலுங்கு படமும், ‘மிஸ்டர் பச்சன்’ என்ற தெலுங்கு படமும் வெளியாகிறது. ஆகா ஓடிடியில் ‘பாலுகனி டாக்கீஸ்’ என்ற தெலுங்கு படமும், ஈடி டிவி வின் ஓடிடியில் ‘கமிட்டி கொரலு’ என்ற தெலுங்கு படமும், சோனி லைவ் ஓடிடியில் ‘பெஞ்ச்லைஃப்’ என்ற தெலுங்கு சீரிஸ் வெளியாகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment