கீர்த்தி சுரேஷூக்கு ஐஸ்க்ரீம் கடைக்காரர் காட்டிய வித்தை: க்யூட் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷுக்கு ஐஸ்கிரீம் கடை காரர் காட்டிய வித்தை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயம் ரவியின் மகன் துபாயில் உள்ள ஒரு ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்க்ரீம் வாங்கிய போது அந்த கடைக்காரர் அவருக்கு வித்தை காட்டிய வீடியோ வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்து ஜெயம் ரவியின் மனைவி வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்தது.
இந்த நிலையில் அதேபோல் தற்போது கீர்த்தி சுரேஷுக்கும் ஐஸ்கிரீம் கடைக்காரர் வித்தை காட்டியுள்ளார். ஐஸ் கிரீமை அவருக்கு கொடுப்பது போல கொடுத்து அவரை தந்திரமாக ஏமாற்றும் ஐஸ்க்ரீம் கடைக்காரரின் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஐஸ்கிரீமை எடுக்க முடியாமல் படாத பாடுபடும் கீர்த்தி சுரேஷின் க்யூட் வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ’தசரா’, ’போலோ சங்கர்’, ’மாமன்னன்’, ’சைரன்’ ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி விஜய்யின் 67வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
What An Adorable & An Exquisite Beauty??????@KeerthyOfficial #KeerthySuresh pic.twitter.com/4dZVvtmQWG
— keerthy??bhaskar (@keerthy_bhaskar) October 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments