கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்து ஒரு எம்பி.. பாரதிய ஜனதா கட்சியின் மாஸ் திட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளில் திரை உலகை சேர்ந்தவர்கள் இணைந்து வரும் காட்சியையும், அவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் செய்தியையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தந்தை சுரேஷ் என்பவர் மலையாள திரையுலகில் பிரபல தயாரிப்பாளர் என்பதும் அது மட்டும் இன்றி அவர் கேரள திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் சுரேஷ் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு ஒரு முக்கிய பதவியையும் பாஜக கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் சசிதரூரை எதிர்த்து போட்டியிட பாஜக குறித்து வைத்த வேட்பாளர் பட்டியலில் சுரேஷ் பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த தொகுதியில் நடிகை ஷோபனா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சுரேஷ் பெயரும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, திருச்சூர் என்ற தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் சுரேஷ் போட்டியிடுவாரா? அப்படியே போட்டியிட்டாலும் வெற்றி பெற்று எம்பி ஆகி பாராளுமன்ற செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments