சாலையோர கையேந்தி பவனில் உணவை ருசித்து சாப்பிடும் கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக சினிமா பிரபலங்கள் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டும் சாப்பிடும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாலை ஓரத்தில் உள்ள கையேந்தி பவனில் சாப்பிடும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், ரஜினி, அஜித், சூர்யா, தனுஷ், விஷால் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தற்போது கூட அவர் பிஸியாக நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், குறிப்பாக ’ரகு தாத்தா’ ’ரிவால்வர் ரீட்டா’ ’கன்னிவெடி’ ஆகிய மூன்று தமிழ் படங்களிலும் அட்லி தயாரிப்பில் உருவாகி வரும் ’தெறி’ படத்தின் ரீமேக்கான ’பேபி ஜான்’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷ் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவருக்கு 17 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக நேற்று அவர் தந்தையர் தினத்தில் தனது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அதற்கு லட்சக்கணக்கில் லைக்ச் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் நடிகை கீர்த்தி சுரேஷ் சாலையோரத்தில் கையேந்தி பவனில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.
#KeerthySuresh eats at roadside Thattukada pic.twitter.com/5beAjADo0C
— Parthiban A (@ParthibanAPN) June 17, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments