படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் நாய்க்குட்டியுடன் விளையாடும் கீர்த்தி சுரேஷ்: க்யூட் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,November 29 2022]

நாகர்கோவிலுக்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடன் அழைத்து செல்ல நாய் குட்டி உடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்றும் அவர் நடித்து முடித்துள்ள உதயநிதியின் ‘மாமன்னன்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தன்னுடன் தனது செல்ல நாய் குட்டியையும் அழைத்துச் சென்ற நிலையில் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நாய்க்குட்டி உடன் விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவின் கேப்ஷனாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியபோது, ‘கடந்த சில நாட்களாக படப்பிடிப்பிற்காக நாகர்கோவிலில் தங்கி உள்ளேன். இங்கு தங்கியிருக்கும் நாட்களில் சில நல்ல நினைவுகளை சேமித்து வைத்துக் கொண்டேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் 7 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்கள் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா.. எந்த நாடு தெரியுமா?

பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அடுத்ததாக உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

என் அம்மாவை எப்படி நீ இப்படி பேசலாம்.. கதறியழுத ஷிவின்.. யார் காரணம்?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின், 'என் அம்மாவை நீ எப்படி இப்படி பேசலாம் என சக போட்டியாளரிடம் வாதிட்டு கதறி அழுத காட்சியின் வீடியோ சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது

சரியான ஜோடி.. மணமக்களை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

 நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் நேற்று சிறப்பாக நடந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'சரியான

'ராட்சசன்' இயக்குனரின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோவா?

 விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த 'ராட்சசன்' என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது

நயன்தாரா அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோல்டு'  திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.