ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி: தேசிய விருது பெற்ற நடிகைக்கு நன்றி கூறிய சூரி!

  • IndiaGlitz, [Thursday,August 27 2020]

பிரபல காமெடி நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், தேசிய விருது பெற்றவருமான கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் சூரிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூரி அண்ணா’ என்று நடிகை கீர்த்திசுரேஷ் தெரிவித்துள்ளதற்கு நடிகர் சூரி ’ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி’ என தெரிவித்துள்ளார். சூரி மற்றும் கீர்த்தி சுரேஷின் அண்ணன் தங்கை பாசத்தை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து வருவதாகவும் அதில் இருந்து இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கு ஒருவர் உரையாடிக்கொள்ளும்போது அண்ணா.. தங்கச்சி.. என்று பாசமலர் போல் வலம் வருவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.