பிரபல நடிகைகளின் குழந்தைப்பருவ புகைப்படங்கள்: இருவருமே சிவகார்த்திகேயன் நாயகிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இருவருமே சிவகார்த்திகேயனுடன் நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடித்த ’ரஜினி முருகன்’ மற்றும் ’ரெமோ’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன்.
இந்த நிலையில் இன்று கல்யாணி பிரியதர்ஷன் பிறந்தநாளை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு சிறுவயது முதலே தோழியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் சிறு வயதில் எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் சிறுவயதில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. தற்போது கல்யாணி பிரியதர்ஷன் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ திரைப்படத்திலும் நான்கு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy Happy Birthday Ammu!!!!! Wishing you an amazing birthday with lots of love, fun and luck !!
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 5, 2021
May you have the craziest year ahead!!!! ????
Here’s some crazy memories from the past, @kalyanipriyan ?? #HappyBirthdayKalyaniPriyadarshan #HBDKalyaniPriyadarshan pic.twitter.com/M7sVKr1A2w
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com