தல அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

  • IndiaGlitz, [Sunday,August 22 2021]

தல அஜித் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் ’வேதாளம்’. கடந்த 20115ம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் சுமார் ரூ.120 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் அஜீத் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ’போலா சங்கர் என்ற டைட்டில் இன்று காலை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’வேதாளம்’ படத்தில் அஜீத் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர் சிரஞ்சீவிக்கு கீர்த்தி சுரேஷ் ராக்கி கயிறு கட்டுவது போன்ற போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.