நாளைய பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சூப்பர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கீர்த்தி சுரேஷ் நடித்த "ரகு தாத்தா" என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான நிலையில், தற்போது அவர் நடித்துள்ள அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்த திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, "ரிவால்வர் ரீட்டா" டீசர் நாளை வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது, இதனை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "நவீன சரஸ்வதி சபதம்" என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீன் ரோல்டன் இசையில் உருவாகிய இந்த படத்தை தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான "பேபி ஜான்" என்ற படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த "தெறி" படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும், சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Coming in hot tomorrow 🤗😛#RevolverRitaTitleTeaser from tomorrow🔥 https://t.co/qRdAbLJmzp
— Keerthy Suresh (@KeerthyOfficial) October 16, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments