நாளைய பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான நிலையில், தற்போது அவர் நடித்துள்ள அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்த திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ரிவால்வர் ரீட்டா டீசர் நாளை வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது, இதனை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீன் ரோல்டன் இசையில் உருவாகிய இந்த படத்தை தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான பேபி ஜான் என்ற படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும், சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயனின் 'அமரன்' இசை வெளியீடு எப்போது? எங்கே? சூப்பர் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளிவருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மற்றும் விழா நடைபெறும்

6க்கு 16.. மீண்டும் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்த த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள்..!

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில், விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் நடிகை  த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் த்ரிஷா இணைந்ததாக

6 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குனர் களத்தில் அர்ஜுன்.. டைட்டில் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவின் சூப்பர் ஹிட் படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

என் டி ஆர் பாலகிருஷ்ணா நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று நடைபெறுவதை அடுத்து படக்குழுவினர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 இனி பேட்டி, வீடியோ கிடையாது:  திடீரென அதிரடி முடிவெடுத்த பாடகி சுசித்ரா..!

பாடகி சுசித்ரா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை வெளியிட்டும் YouTube சேனல்களில் பேட்டி அளித்தும் வந்த நிலையில் தற்போது மும்பையில் செட்டில் ஆகப் போவதாகவும்